ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது!

 

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

பொதுமுடக்க காலத்தில் தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு விலை உயர்வை சந்தித்தது. ரூ.43 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை மேலும் உயரும் என கூறப்பட்டது நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தங்கம் விலை குறையத் தொடங்கியது. தற்போது தங்கம் விலை ரூ.38 ஆயிரத்தில் நீடித்து வரும் நிலையில் மாறி மாறி ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது!

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,081க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,408க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.68.10க்கும் ஒரு கிலோ தங்கம் ரூ.68,100க்கும் விற்பனையாகிறது.