‘கிராமுக்கு ரூ.12 அதிகரிப்பு’ இன்றைய தங்கம் விலை நிலவரம்!

 

‘கிராமுக்கு ரூ.12 அதிகரிப்பு’ இன்றைய தங்கம் விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கம் விலை தொடர் ஏற்றத்தைக் கண்டது. கிட்டத்தட்ட 8 நாட்களாக தங்கம் விலை ஏற்றத்தைக் கண்டதால், ரூ.37 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த தங்கம் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தை எட்டியது. கடந்த மார்ச் மாதம் நடந்ததை போல, தங்கம் விலை மேலும் உயர்ந்து உச்சத்தை எட்டுமா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், நேற்று சரிந்த தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.

‘கிராமுக்கு ரூ.12 அதிகரிப்பு’ இன்றைய தங்கம் விலை நிலவரம்!

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து ரூ.4,713க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.37,704க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.70.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,500க்கும் விற்பனையாகிறது.