தொடர்ச்சியாக தங்கம் விலை சரிவு: இன்றைய நிலவரம் என்ன?

 

தொடர்ச்சியாக தங்கம் விலை சரிவு: இன்றைய நிலவரம் என்ன?

கடந்த ஆண்டு இறுதி வரையிலேயே சுமார் ரூ.30 ஆயிரத்துக்குள்ளாகவே நீடித்த தங்கம் விலை, பொதுமுடக்க காலத்தில் எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை சந்தித்தது. தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமுடக்கம் நீடித்தால் விலை மேலும் உயரும் என பரபரப்பாக பேசப்பட்டது, மக்கள் மத்தியில் பீதியை இன்னும் அதிகரிக்கச் செய்தது. ஆனால், நல்ல வேளையாக தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது.

தொடர்ச்சியாக தங்கம் விலை சரிவு: இன்றைய நிலவரம் என்ன?

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.37 குறைந்து ரூ.4,576க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.36,608க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.64.40க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.64,400க்கும் விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.