இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்வு!

 

இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்வு!

பொதுமுடக்க காலத்தில் தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை எட்டி மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கக் காசுகளின் மீதான முதலீடுகள் அதிகரித்ததால் தான் தங்கம் விலை, வரலாறு காணாத அளவுக்கு ஏற்றத்தை சந்தித்ததாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து, தளர்வுகள் அளிக்கப்பட்டதில் இருந்து தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஒரு வாரமாக தொடர் வீழ்ச்சியை சந்தித்த தங்கம் விலை இன்று அதிரடியாக அதிகரிக்க தொடங்கியது.

இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்வு!

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.36888க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4,611க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. மேலும் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.2,900 உயர்ந்துள்ளது. அதன்படி கிராம் ரூ.67.70க்கு விற்பனையாகிறது.