‘மீண்டும் உச்சத்தை நோக்கி’… தங்கம் விலை உயர்வால் சாமானியர்கள் அதிர்ச்சி!

 

‘மீண்டும் உச்சத்தை நோக்கி’… தங்கம் விலை உயர்வால் சாமானியர்கள் அதிர்ச்சி!

கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட கொரோனா பொதுமுடக்கத்தின் போது, எதிர்பாராத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து. கிட்டத்தட்ட ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது. அச்சமயம் தொழில்துறையில் நிலவிய தேக்கத்தால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகளவு முதலீடு செய்தது, விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியதும் தங்கம் விலை கணிசமாக குறைந்து ரூ.33 ஆயிரத்தில் நீடித்து வந்தது.

‘மீண்டும் உச்சத்தை நோக்கி’… தங்கம் விலை உயர்வால் சாமானியர்கள் அதிர்ச்சி!

தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வருவதால், தொழில்துறை ஆட்டம் காணுகிறது. முதலீட்டாளர்கள் மீண்டும் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மீது திசைத் திருப்பியுள்ளனர். இதனால், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தங்கம் விலை ஏறுமுகத்தில் உள்ளது.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.4,428க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.384 உயர்ந்து ரூ.35,424க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,400க்கும் விற்பனையாகிறது.