இரண்டாம் நாளாக உயர்வு; ஷாக் கொடுக்கும் தங்கம் விலை!

 

இரண்டாம் நாளாக உயர்வு; ஷாக் கொடுக்கும் தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.23 அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் தொழில்துறையில் தேக்கம் குறித்த அச்சம் நிலவுகிறது. இதனால் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து கிட்டத்தட்ட ஒரு மாதமாக ரூ.36 ஆயிரத்திலேயே நீடித்து வருகிறது. அதாவது, ஒரு நாள் குறைந்தால் அடுத்தடுத்த நாட்களில் உயரும் சூழலே தற்போது நிலவுகிறது. கடந்த 27ம் தேதி ரூ.36,016க்கு விற்பனையான தங்கம் விலை தொடர்ந்து 2ஆவது நாளாக ஏற்றத்தை சந்தித்துள்ளது.

இரண்டாம் நாளாக உயர்வு; ஷாக் கொடுக்கும் தங்கம் விலை!

இன்றைய நிலவரத்தின் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.23 அதிகரித்து ரூ.4,530க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.184 அதிகரித்து ரூ.36,240க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,200க்கும் விற்பனையாகிறது.