மூன்றாம் நாளாக தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம் என்ன?

 

மூன்றாம் நாளாக தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 அதிகரித்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ரூ.36 ஆயிரத்திலேயே நீடித்து வருகிறது. ஒரு நாள் குறைந்தால் அடுத்தடுத்த நாட்களில் ஏற்றத்தை சந்திக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ரூ.36,016க்கு விற்பனையான தங்கம் விலை நேற்று நேற்று முன்தினம் ரூ.36,056ஆக அதிகரித்தது. நேற்றும் தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து ரூ.36,328க்கு விற்பனையானது. இந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

மூன்றாம் நாளாக தங்கம் விலை உயர்வு; இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 அதிகரித்து ரூ.4,562க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.168 அதிகரித்து ரூ.36,496க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,200க்கும் விற்பனையாகிறது.