இரண்டாம் நாளாக தங்கம் விலை அதிகரிப்பு!

 

இரண்டாம் நாளாக தங்கம் விலை அதிகரிப்பு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் முழுவதும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து ரூ.36 ஆயிரத்திலேயே நீடித்து வந்த தங்கம் விலை, இம்மாதமும் அதே விலையில் நீடிக்கிறது. மாத தொடக்கத்தின் முதல் நாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் அன்று தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.36,384க்கு விற்பனையானது. அதற்கு மறுநாள் ரூ.36,184ஆக குறைந்த தங்கம் விலை நேற்று ரூ.36,216 ஆக அதிகரித்ததைத் தொடர்ந்து இன்றும் அதிகரித்துள்ளது.

இரண்டாம் நாளாக தங்கம் விலை அதிகரிப்பு!

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ரூ.4,533க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.36,264க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,100க்கும் விற்பனையாகிறது.