மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

 

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை:  இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. ஒரு நாள் ரூ.1000 குறைந்தால், அதற்கு அடுத்த நாள் அதை விட அதிகமாக உயருகிறது. இத்தகைய சூழலே நீட்டித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றத்தைக் கண்ட தங்கம் விலை நேற்று குறைந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து ரூ.37 ஆயிரத்தில் நீடிக்கிறது.

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை:  இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,629க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.37,032க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67.30க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.67,300க்கும் விற்பனையாகிறது.