பண்டிகை காலத்தில் ‘அதிகரிக்கும் தங்கம் விலை’: அதிருப்தியில் மக்கள்!

பண்டிகை காலத்தில் ‘அதிகரிக்கும் தங்கம் விலை’: அதிருப்தியில் மக்கள்!

சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 அதிகரித்துள்ளது.

பண்டிகை காலத்தில் ‘அதிகரிக்கும் தங்கம் விலை’: அதிருப்தியில் மக்கள்!

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் விலை வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது. ரூ.43 ஆயிரத்தை தங்கம் விலை எட்டியது நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, தங்கம் விலை குறையுமா? என எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தங்கம் விலை குறையத் தொடங்கியது. அதன் படி தற்போது தங்கம் விலை ரூ.38 ஆயிரத்தில் நீடித்து வருகிறது.

பண்டிகை காலத்தில் ‘அதிகரிக்கும் தங்கம் விலை’: அதிருப்தியில் மக்கள்!

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.27 உயர்ந்து ரூ.4,788க்கு விற்பனையாகிறது. அதன் படி சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.38,304க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67.20க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.67,200க்கும் விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலர் தங்கம் வாங்கி வரும் நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.