Home தமிழகம் கொரோனா பீதியில் மேலும் ஓர் அதிர்ச்சி..ரூ.38 ஆயிரத்தை நெருங்குகிறது தங்க விலை!

கொரோனா பீதியில் மேலும் ஓர் அதிர்ச்சி..ரூ.38 ஆயிரத்தை நெருங்குகிறது தங்க விலை!

கொரோனா நோய்த்தொற்று உலக நாடுகளைப் புரட்டிப் போட்டுள்ளது. அதனுள் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. மக்களை ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் தங்க விலை இதுவரை கண்டிராத விலை உயர்வைச் சந்தித்து வருகிறது.

கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவத் தொடங்கிய ஏப்ரல் மாதம் தங்க விலை ரூ.36 ஆயிரத்தைக் கடந்தது. அதனைத் தொடர்ந்து, தொடர்ந்து தங்க விலை உயர்வைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.52 அதிகரித்து ரூ.4,678க்கு விற்கப்படுகிறது. அதன் படி சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.416 உயர்ந்து ரூ.37,424க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.54.10க்கும், கிலோவுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.54,100க்கும் விற்கப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

உலகிலேயே பெரிய கட்சிதான்… ஆனால் முதல்வர் வேட்பாளர் இல்லை… பா.ஜ.க.வை கிண்டலடித்த தேஜஸ்வி யாதவ்

உலகிலேயே பெரிய கட்சிதான் ஆனால் முதல்வர் வேட்பாளர் இல்லை என்று பா.ஜ.க.வை தேஜஸ்வி யாதவ் கிண்டல் அடித்துள்ளார். பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 28ம் தேதி...

அனைத்து கட்சிகளும் தங்களது அரசியலை ஒதுக்கி வைத்தால்… மாசுபாட்டை தோற்கடிக்க முடியும்… கெஜ்ரிவால்

அனைத்து கட்சிகளும் தங்களது அரசியலை ஒதுக்கி வைத்து, ஒன்றிணைந்து நேர்மையான நடவடிக்கைகளை எடுத்தால் குறுகிய காலத்தில் மாசுபாட்டை தோற்கடிக்க முடியும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

ராஜினாமா அல்லது அரசு கலைக்கப்படுவதற்கு பயப்பட மாட்டேன்… பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆவேசம்

நான் ராஜினாமா செய்ய அல்லது என் அரசு கலைக்கப்படுவதற்கு பயப்பட மாட்டேன் ஆனால் விவசாயிகளை பாதிக்கவோ அல்லது அழிக்கவோ விட மாட்டேன் என்று அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்...

டூ வீலரில் செல்லும் எல்லோரும் ஹெல்மெட் போடுங்க.. இல்லைன்னா 3 மாதம் டிரைவிங் லைசென்ஸ் ரத்து…

கர்நாடகாவில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் ஹெல்மெட் அணிவது அவசியம். இதனை பின்பற்றவில்லையென்றால் அபராதம் மற்றும் 3 மாத காலத்துக்கு டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என அம்மாநில...
Do NOT follow this link or you will be banned from the site!