மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை… அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!

 

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை… அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!

பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருப்பதால் தொழில்துறை ஆட்டம் காணுகிறது. முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தின் மீது முதலீடுகளை திசை திருப்பியுள்ளனர். கடந்த ஆண்டும் இதே போன்ற சூழல் தான் நிலவியது. அச்சமயம் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு ஏற்றத்தைக் கண்டது. சுமார் ரூ. 43 ஆயிரத்தை எட்டி சாமானிய மக்களுக்கு பேரதிர்ச்சி அளித்தது.

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை… அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!

பின்னர், பொது முடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டதும் தங்கம் விலை கிடுகிடுவென குறைந்து ரூ.33 ஆயிரத்தில் நீடித்தது. இத்தகைய சூழலில் தான், கொரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கியது. தொழில்துறையில் மீண்டும் தேக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக, தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று காலை ரூ.384 உயர்ந்ததைத் தொடர்ந்து தற்போது மீண்டும் 400 ரூபாய் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.4,652க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ரூ.37,216க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.77.10க்கும் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.77,100க்கும் விற்பனையாகிறது.