‘தங்கம் விலையில் அதிரடி திருப்பம்’ சவரனுக்கு ரூ.1,464 குறைவு!

 

‘தங்கம் விலையில் அதிரடி திருப்பம்’ சவரனுக்கு ரூ.1,464 குறைவு!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,464 குறைந்திருக்கிறது.

பொதுமுடக்க காலத்தில் தங்க விலை வரலாறு காணாத ஏற்றத்தை சந்தித்தது, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுமார் ரூ.44 வரை உயர்ந்த தங்கம் விலை, இந்த ஆண்டு இறுதிக்குள் 50 ஆயிரத்தை எட்ட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தங்கம் விலை கடந்த மாதத்தில் இருந்து கணிசமாக குறைந்து வந்த ரூ.38 ஆயிரத்தில் நீடித்து வந்தது. இந்த நிலையில், தங்கம் விலையில் திடீர் திருப்பமாக சவரனுக்கு ரூ.1,464 குறைந்திருக்கிறது.

‘தங்கம் விலையில் அதிரடி திருப்பம்’ சவரனுக்கு ரூ.1,464 குறைவு!

ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.183 குறைந்து ரூ.4,680க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.1,464 குறைந்து ரூ.37,440க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.65.40க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.65,400க்கு விற்பனையாகிறது.