தங்கம் விலை சரிவு; இன்றைய நிலவரம் என்ன?

 

தங்கம் விலை சரிவு; இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் ரூ.36,328க்கு விற்பனையானது. இதைத்தொடர்ந்து நேற்று தங்கம் விலை ரூ.224 அதிகரித்து ரூ. 36,552க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.

தங்கம் விலை சரிவு; இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரத்தின் படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.4,548க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.36,384க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ,73,000க்கும் விற்பனையாகிறது.