ஷாக் கொடுத்த தங்கம் விலை: ரூ.38 ஆயிரத்தை எட்டியது!

 

ஷாக் கொடுத்த தங்கம் விலை: ரூ.38 ஆயிரத்தை எட்டியது!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தின் போது அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை, ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் கணிசமாக குறையத் தொடங்கியது. அதாவது ரூ.43 ஆயிரத்துக்கு மேல் விற்கப்பட்டு வந்த தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ.6,000 குறைந்து ரூ.38 ஆயிரத்தில் நீடித்து வந்தது. அதன் பிறகு தங்கம் விலையில் பெரிதாக மாற்றம் இருக்கவில்லை. கடந்த நவம்பர் மாதம் மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 குறைந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் ரூ.37 ஆயிரத்தில் நீடித்து வந்தது. இதைத் தொடர்ந்து, தங்கம் விலை அதிரடியாக உயரத் தொடங்கி தற்போது மீண்டும் ரூ.38 ஆயிரத்தை எட்டியுள்ளது.

ஷாக் கொடுத்த தங்கம் விலை: ரூ.38 ஆயிரத்தை எட்டியது!

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,778க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.272 உயர்ந்து ரூ.38,224க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2.60 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.74.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,100க்கும் விற்பனையாகிறது.