“நகையை கழட்டிய நர்ஸ் ,கம்மலை கழட்டிய கம்பௌண்டர்” -இறந்த பெண்ணின் ஆபரணங்களை ஆட்டைய போட்ட ஆஸ்பத்திரி.

“நகையை கழட்டிய நர்ஸ் ,கம்மலை கழட்டிய கம்பௌண்டர்” -இறந்த பெண்ணின் ஆபரணங்களை  ஆட்டைய போட்ட ஆஸ்பத்திரி.

கர்நாடக மாநிலம் ராம்துர்க் மாவட்டத்தில் பார்வதி என்ற பெண்ணை அவரின் உறவினர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் .ஆனால் அந்த பெண் சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளிக்கிழமையன்று இறந்தார் .

“நகையை கழட்டிய நர்ஸ் ,கம்மலை கழட்டிய கம்பௌண்டர்” -இறந்த பெண்ணின் ஆபரணங்களை  ஆட்டைய போட்ட ஆஸ்பத்திரி.
இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் அந்த பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு தங்களின் வீட்டிற்கு எடுத்து செல்ல வந்த போது, அவரின் உடலில் அவர் அணிந்திருந்த தங்க நகைகள் எதையுமே காணவில்லை .பெண்ணின் கழுத்திலிருந்த தாலி ,கம்மல் ,மூக்குத்தி மற்றும் எந்த தங்க நகையும் காணாததால் அவரின் உறவினர்கள் திடுக்கிட்டனர் .மேலும் இந்த காணாமல் போன நகைகள் பற்றி ஹாஸ்பிடல் நிர்வாகத்திடம் விசாரித்த போது அவர்கள் தங்களுக்கும் எதுவும் அந்த நகைகள் பற்றி தெரியாது என்று கூறியுள்ளார் .மேலும் சில கம்பௌண்டர்கள் அவர்களிடம் சண்டைக்கே வந்துள்ளனர்
இதனால் இறந்த பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகாரளித்தனர் .போலீசார் அந்த ஹாஸ்ப்பிட்டலுக்கு விசாரணைக்கு வந்ததும் பயந்து போன நர்ஸும் ,கம்பௌன்டரும் அந்த பெண்ணிடம் திருடிய நகைகளை ஒப்படைத்தனர் .நகைகள் திருமப கிடைத்ததால் அந்த பெண்ணின் உறவினர்கள் புகாரை வாபஸ் பெற்றனர் .போலீசாரும் வழக்கு எதுவும் பதியவில்லை.

“நகையை கழட்டிய நர்ஸ் ,கம்மலை கழட்டிய கம்பௌண்டர்” -இறந்த பெண்ணின் ஆபரணங்களை  ஆட்டைய போட்ட ஆஸ்பத்திரி.