“புருடா விடுகிறீர்களா என கேட்ட பரோடா பேங்க்” -வங்கி லாக்கரில் வைத்த 21 லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயம் -கஸ்டமர் கண்ணீர் ..

 

“புருடா விடுகிறீர்களா என கேட்ட பரோடா பேங்க்” -வங்கி லாக்கரில் வைத்த 21 லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயம் -கஸ்டமர் கண்ணீர் ..

பரோடா வங்கியின் லாக்கரில் ஒரு வாடிக்கையாளர் வைத்த 21 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனதால் வங்கி லாக்கரில் நகை வைத்திருப்போர் அதிர்ச்சியடைந்துள்ளனர் .

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜெயநகர் பகுதியிலிருக்கும் பரோடா பேங்க் லாக்கரில் சிவப்ரசாத் என்ற அந்த வங்கியிலன் கஸ்டமர், கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய 21 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை வைத்துள்ளார் .பிறகு உலகம் முழுவதும் கொரானா பரவியதால் கடந்த ஐந்து மாதமாக பேங்க் பக்கமே போகாததால் லாக்கரை திறந்து பார்க்க முடியவில்லை .ஆனால் கடந்த வாரம் அதாவது ஜூலை 22ம் தேதி அந்த வங்கிக்கு சென்றார் .அங்கு அவர் தனது லாக்கரை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார் .ஆம் அங்கு ஐந்து மாதங்களுக்கு முன்னால் வைத்து விட்டு போன 21 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை காணவில்லை .நகையை காணாத சிவபிரசாத் உடனே வங்கி நிர்வாகத்திடம் சென்று கேட்ட போது அவர்கள் ,சரியாக பதில் சொல்லாமல் , அவர் ஏதோ பொய் சொல்வதாக நினைத்து அலைக்கழித்துள்ளார்கள்.

“புருடா விடுகிறீர்களா என கேட்ட பரோடா பேங்க்” -வங்கி லாக்கரில் வைத்த 21 லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயம் -கஸ்டமர் கண்ணீர் ..
இதனால் பரோடா வங்கி மீது கடும் கோபத்துக்குள்ளான அவர் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார் .
அவரின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் ,உடனே வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .
இதே போல ஒரு மோசடி 2019ம் ஆண்டு கூட பெங்களூரு லிங்கராஜபுரம் முத்தூட் நிறுவன லாக்கரில் நடந்தது .அப்போது அந்த லாக்கரிலிருந்து 16 கோடி ரூபாய் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள் .அப்போது அந்த நிறுவனத்தின் மேல் பகுதியில் துளையிட்டு நான்கு பேர் சேர்ந்து நகைகளை திருடி சென்றுள்ளனர் .அதனால் போலீசார் அதே போல் அந்த பரோடா வங்கியில் யாராவது செய்திருப்பார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள் .“புருடா விடுகிறீர்களா என கேட்ட பரோடா பேங்க்” -வங்கி லாக்கரில் வைத்த 21 லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயம் -கஸ்டமர் கண்ணீர் ..