சோப்புக்குள் தங்கம் ,சீப்புக்குள் தங்கம் – விமான நிலையத்தில் நூதனமுறையில் தங்கம் கடத்தல் – சுங்க அதிகாரிகள் அதிர்ச்சி ..

சோப்புக்குள் தங்கம் ,சீப்புக்குள் தங்கம் – விமான நிலையத்தில் நூதனமுறையில் தங்கம் கடத்தல் – சுங்க அதிகாரிகள் அதிர்ச்சி ..

அடிக்கடி சுங்கத்துறையால் விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பிடிபடுவதையும் ,கடத்தல்காரர்களை கைது செய்யப்படுவதையும் நாம் கேள்விப்படுகிறோம் .ஆனால் இப்போது புதுமையான முறையில் வெளிநாட்டு தூதரக பெட்டியில் 30கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது அதிகாரிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது .

சோப்புக்குள் தங்கம் ,சீப்புக்குள் தங்கம் – விமான நிலையத்தில் நூதனமுறையில் தங்கம் கடத்தல் – சுங்க அதிகாரிகள் அதிர்ச்சி ..
கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இரண்டு நாட்களாக ஒரு வெளிநாட்டு தூதரக பெட்டி ஒன்று பிரிக்கப்படாமல் ,யாரும் உரிமை கோராமல் கிடந்தது .அந்த பார்சலை கேட்டு யாரும் வராததால் சந்தேகப்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள் ஞாயிற்று கிழமை அந்த பார்சலை பிரித்து பார்த்தார்கள் .அதில் குளியலறை பொருட்களுக்குள் 30கிலோ தங்கம் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தார்கள் .

சோப்புக்குள் தங்கம் ,சீப்புக்குள் தங்கம் – விமான நிலையத்தில் நூதனமுறையில் தங்கம் கடத்தல் – சுங்க அதிகாரிகள் அதிர்ச்சி ..
அந்த பார்சலில் சில குறிப்பிட்ட முக்கிய சிண்டிகேட் உறுப்பினர்களின் பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது..அதற்கான சில ஆவணங்களையும் அவர்கள் தாக்கல் செய்துள்ளார்கள் .மேலும் இதன் பின்னணியில் செயல்படுவதாக சந்தேகப்படும் சிண்டிகேட் உறுப்பினர்கள் சிலரை பிடித்து விசாரணை செய்து வ்ருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் கூறினார்கள் .அதே நேரத்தில் சரக்கு அனுப்பிய நபரும் விசாரணையில் ஒத்துழைக்கிறார் என்று சுங்க ஆணையர் சுமித் குமார் தெரிவித்தார்.இதே போன்ற முறையில் இதற்கு முன்பு தங்கம் அல்லது வேறு ஏதாவது பொருள் கடத்தப்பட்டதா என்று அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.இது போல கடந்த ஆண்டு 550கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது .அது ஒரு தேசிய சாதனை என்று குமார் கூறினார் .