தங்கம் இறக்குமதி 2 மடங்குக்கு மேல் அதிகரிப்பு.. ஜூலையில் மட்டும் ரூ.31,500 கோடிக்கு தங்கம் இறக்குமதி

தங்கம் இறக்குமதி 2 மடங்குக்கு மேல் அதிகரிப்பு.. ஜூலையில் மட்டும் ரூ.31,500 கோடிக்கு தங்கம் இறக்குமதி

நம் நாட்டில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.31,500 கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தங்க ஆபரண பயன்பாடு அதிகம். அதேசமயம் உள்நாட்டில் உற்பத்தி பெயரளவுக்கு உள்ளதால் தேவையை பூர்த்தி செய்வதற்காக தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கிறது. இதனை தவிர்க்கவும், தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்கும் நோக்கில், 2015 நவம்பரில் பிரதமர் நரேந்திர மோடி தங்க பத்திர திட்டத்தை தொடங்கி வைத்தார். தங்கத்தை உலோகமாக வாங்குவதற்கு பதில் காகித வடிவில் (பத்திரமாக) வாங்குவதை தங்க பத்திர திட்டம். இந்த திட்டத்துக்கு வரவேற்பு இருந்தாலும், மக்கள் தங்கத்தை உலோகமாக வாங்குவதைதான் விரும்புகின்றனர்.

தங்கம் இறக்குமதி 2 மடங்குக்கு மேல் அதிகரிப்பு.. ஜூலையில் மட்டும் ரூ.31,500 கோடிக்கு தங்கம் இறக்குமதி
தங்க நகை

இதனால் தங்கம் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்துதான் வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் மதிப்பு அடிப்படையில் தங்கம் இறக்குமதி 2 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. அந்த மாதத்தில் சுமார் ரூ.31,500 கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2020 ஜூலை மாதத்தில் சுமார் ரூ.13,350 கோடிக்கு மட்டுமே தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது. பண்டிகை காலம் மற்றும் திருமண காலம் தொடங்குவதை கருத்தில் கொண்டு தங்க வர்த்தகர்கள் அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தங்கம் இறக்குமதி 2 மடங்குக்கு மேல் அதிகரிப்பு.. ஜூலையில் மட்டும் ரூ.31,500 கோடிக்கு தங்கம் இறக்குமதி
தங்க நகை

நம் நாட்டில் திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் என எந்தவொரு குடும்ப விழாக்களிலும் தங்கம் பிரதானமாக இருக்கும். மஞ்சள் உலோகமான தங்கம் சிறந்த முதலீடாகவும் கருதப்படுகிறது. மேலும் இக்கட்டான நேரங்களில் நிதி தேவைக்கு கொடுக்கும் என்பதால்தான் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் நம்மவர்கள் வாங்குவது குறையுமே தவிர வாங்காமல் இருக்கமாட்டார்கள்.