‘3 நாட்கள் சரிவைத் தொடர்ந்து இன்று உயர்வு’ தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் உங்களுக்காக!

‘3 நாட்கள் சரிவைத் தொடர்ந்து இன்று உயர்வு’ தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் உங்களுக்காக!

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும் எல்லா நாடுகளும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்தது. இதனால் தங்கத்தின் வரத்து குறைந்து விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு சில நாட்கள் தங்க விலை குறைந்து வந்தாலும், கொரோனா பொதுமுடக்க நாட்களில் இதுவரை இல்லாத ஏற்றத்தை கண்டது. கடந்த 15 நாட்களுக்கு மேலாக அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்த தங்க விலை, கடந்த 3 நாட்களாக அதிரடியாக சரிந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்க விலை ஏற்றத்தை கண்டுள்ளது.

‘3 நாட்கள் சரிவைத் தொடர்ந்து இன்று உயர்வு’ தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் உங்களுக்காக!

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.5,015க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.40,840க்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளி விலை 80 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.