ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. அதிர்ச்சியில் சாமானியர்கள்!

 

ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. அதிர்ச்சியில் சாமானியர்கள்!

கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தொழில்துறையில் கடும் தேக்கம் நிலவியது. இதனால், முதலீட்டாளர்கள் பலர் தங்களது முதலீடுகளை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு தங்கத்தில் முதலீடு செய்தனர். இது தங்கத்தின் தேவையை அதிகரிக்கச் செய்ததோடு, விலை உயர்வுக்கும் வழி வகுத்தது. அச்சமயம் தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது.

ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. அதிர்ச்சியில் சாமானியர்கள்!

இதையடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழில்துறையில் இயல்பு நிலை திரும்பியதால் தங்கம் விலை கணிசமாக குறைந்து ரூ.33 ஆயிரத்தில் நீடித்து வந்தது. தற்போது கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால் தொழில்துறையில் சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது. முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தின் பக்கம் திசை திரும்பியுள்ளனர். இதன் காரணமாக, தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. அதிர்ச்சியில் சாமானியர்கள்!

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ரூ.4,387 விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.35,096க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,100க்கும் விற்பனையாகிறது. ரூ.33 ஆயிரத்தில் நீடித்து வந்த தங்கம் விலை ரூ.35 ஆயிரத்தை எட்டியிருப்பது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.