தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

 

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது.

தொழில்துறையில் நிலவும் தேக்கம் குறித்த அச்சத்தால் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பெரிதளவில் மாற்றங்கள் ஏதுமின்றி ரூ.36 ஆயிரத்திலேயே நீட்டித்து வருகிறது. கடந்த 22ம் தேதி மட்டும் தங்கம் விலை ரூ.36 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்து ரூ.35,920க்கு விற்பனையானது. அதற்கு மறுநாளே ஏற்றத்தைக் கண்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இன்றைய நிலவரத்தின் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.4,520க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.36,160க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,100க்கும் விற்பனையாகிறது.