‘ஷாக் கொடுக்கும் தங்கம் விலை’.. அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!

 

‘ஷாக் கொடுக்கும் தங்கம் விலை’.. அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.64 அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டவுடன் தொழில்துறையில் நிலவிய தேக்கம், முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திசை திருப்பியது. தங்களது முதலீடுகளை பாதுகாக்க அமெரிக்க டாலர்கள், பங்குச் சந்தை உள்ளிட்ட அனைத்து முதலீடுகளையும் தங்கத்தில் போட்டனர். இதனால், தங்கம் விலை வரலாறு காணாத ஏற்றத்தை சந்தித்தது.

‘ஷாக் கொடுக்கும் தங்கம் விலை’.. அதிர்ச்சியில் சாமானிய மக்கள்!

இதையடுத்து பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழில்கள் அனைத்தும் பழைய நிலைக்கு திரும்பியதால், தங்கம் விலை கணிசமாக குறைந்து வந்தது. தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைதூக்குவதால் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என கூறப்பட்டு வரும் நிலையில், தங்கம் விலை மீண்டும் ஏற்றம் காண தொடங்கியுள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.4,226க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.512 அதிகரித்து ரூ.33,808க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,500க்கும் விற்பனையாகிறது.