தங்கம் விலையில் மீண்டும் சரிவு: இன்றைய நிலவரம் இது தான்!

 

தங்கம் விலையில் மீண்டும் சரிவு: இன்றைய நிலவரம் இது தான்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது.

பொருளாதார முடக்கத்தின் போது, முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்த நிலையில், தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தைக் கண்டது. தற்போது இயல்பு நிலை திரும்பியிருப்பதால், முதலீட்டாளர்கள் மீண்டும் பங்குச் சந்தை, அமெரிக்க டாலர்கள் என அந்த பக்கம் முதலீடுகளை திசை திருப்பியுள்ளனர். இதன் காரணமாக, தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது.

தங்கம் விலையில் மீண்டும் சரிவு: இன்றைய நிலவரம் இது தான்!

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,621க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,968க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.70.80க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,800க்கும் விற்பனையாகிறது.