‘சரிந்தது தங்கம் விலை’… இன்றைய நிலவரம் என்ன?

 

‘சரிந்தது தங்கம் விலை’… இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது.

பொதுமுடக்கக் காலத்தில் தொழில்துறையில் நிலவும் தேக்கத்தால் தங்கம் விலை பன்மடங்கு உயரும். அதாவது, முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பாதுகாக்க தங்கத்தின் மீது அதிகமாக முதலீடு செய்வர். இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து விலை பன்மடங்கு உயரும். கடந்த ஆண்டு பொதுமுடக்கத்தின் போது, அது போன்ற சூழல் நிலவியது. ஆனால், இந்த முறை தொழில்துறை வீழ்ச்சி அடையவில்லை. தொழில்துறையில் தேக்கம் குறித்த அச்சம் நிலவியதால் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

‘சரிந்தது தங்கம் விலை’… இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,440க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.35,520க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,100க்கும் விற்பனையாகிறது.