தங்கம் விலை மீண்டும் சரிவு : இன்றைய நிலவரம் இது தான்?

 

தங்கம் விலை மீண்டும் சரிவு : இன்றைய நிலவரம் இது தான்?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

கொரோனா வைரஸால் நிலவிய தொழில்துறை தேக்கம், முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி திசை திருப்பியது. தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால், தேவை அதிகரித்து விலை எதிர்பாராத அளவுக்கு அதிகரித்தது. தற்போது அந்த நிலை மாறி ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது. ஒரு சில நாட்களில், ஏற்றத்தை கண்டாலும் பெரும்பாலும் குறைந்த வண்ணமே இருக்கிறது.

தங்கம் விலை மீண்டும் சரிவு : இன்றைய நிலவரம் இது தான்?

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.4,645க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,160க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,500க்கும் விற்பனையாகிறது.