தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. மீண்டும் உச்சத்தை எட்டுமா?

 

தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. மீண்டும் உச்சத்தை எட்டுமா?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு லாக் டவுன் அமல்படுத்தப்பட்ட போது தங்கம் விலை வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது அனைவரும் அறிந்ததே. அச்சமயம் தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ.43 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்து சாமானிய மக்களுக்கு பேரதிர்ச்சி தந்தது. தொழில்துறையில் நிலவிய தேக்கத்தால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம்.

தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. மீண்டும் உச்சத்தை எட்டுமா?

இதையடுத்து, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு தங்கம் விலை கணிசமாக குறைந்து ரூ.33 ஆயிரத்தில் நீடித்து வந்தது. இந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் தலைதூக்குவதால் லாக்டவுன் அமல்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தின் மீது முதலீடுகளை அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இது தங்கம் விலை உயர்வில் எதிரொலிக்கிறது.

இன்றைய நிலவரத்தின் படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 உயர்ந்து ரூ.4,267க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.34,136க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,000க்கும் விற்பனையாகிறது.