சரிந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இது தான்!

 

சரிந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இது தான்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கத்தின் போது தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. தொழில்துறையில் நிலவிய தேக்கத்தால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடுகளை திசை திருப்பினர். இது தங்கம் விலையை அதிகரிக்கச் செய்தது. பின்னர், கொரோனா பாதிப்பு மெல்ல குறையத் தொடங்கியதையடுத்து முதலீட்டாளர்கள் மீண்டும் பழைய படியே ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் உள்ளிட்டவற்றுள் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால், சமீப காலமாக தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது.

சரிந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இது தான்!

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.4,192க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.33,536க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,500க்கும் விற்பனையாகிறது.