தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

 

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

கொரோனாவால் தொழில்துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதனால், பாதுகாப்பாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்தத் தொடங்கினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் என பலவற்றில் இருக்கும் முதலீடுகள் அனைத்தும் தங்கத்தின் பக்கம் திரும்பியது. இது தங்கத்தின் தேவையை அதிகரிக்கச் செய்ததால், தங்கம் விலையில் பெரிதளவு மாற்றம் ஏற்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பியிருப்பதால், முதலீடுகளும் குறைந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கங்கள் நிலவி வருகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.4,655க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.37,240க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,400க்கும் விற்பனையாகிறது.