தொடர் வீழ்ச்சியைக் கண்ட தங்கம் விலை : இன்றைய நிலவரம் என்ன?

 

தொடர் வீழ்ச்சியைக் கண்ட தங்கம் விலை : இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர் சரிவைக் கண்டது. காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் தொடர் சரிவைக் கண்டு ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. தொழில்துறையில் நீடித்த தேக்கம் நீங்கி தற்போது தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்திருப்பதால், தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதே நிலை, நீடித்தால் பழைய படியே ரூ.29 ஆயிரத்துக்கு கீழ் இறங்கும் எனவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

தொடர் வீழ்ச்சியைக் கண்ட தங்கம் விலை : இன்றைய நிலவரம் என்ன?

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,216க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.265 உயர்ந்து ரூ.33,728க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.70.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,100க்கும் விற்பனையாகிறது.