Home தமிழகம் அதிரடி வீழ்ச்சியில் தங்கம் விலை : எவ்வளவு தெரியுமா?

அதிரடி வீழ்ச்சியில் தங்கம் விலை : எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.26 குறைந்திருக்கிறது.

பொதுமுடக்க காலத்தில் தங்கம் விலை தொடர் ஏற்றத்தைக் கண்டதை அனைவரும் அறிவோம். சுமார் ரூ.43 ஆயிரத்தை எட்டி பேரதிர்ச்சியை அளித்தது. இனிமேலும் தங்கம் விலை குறையவே குறையாது என்ற நிலையிலேயே இருந்தது. தொழில்துறையில் நீடித்த தேக்கத்தால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பாதுகாக்க, தங்கத்தில் முதலீடு செய்ததே இதற்கு காரணம் என கூறப்பட்டது. அதன் பிறகு பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு தங்கம் விலை கணிசமாக குறையத் தொடங்கியது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.26 குறைந்து ரூ.4,238க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.33,904க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை ரூ.1.20 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.60க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,600 விற்பனையாகிறது.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews