மீண்டும் ரூ.35 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்தது தங்கம் விலை!

 

மீண்டும் ரூ.35 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்தது தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 அதிகரித்துள்ளது.

பொதுமுடக்க காலத்தில் எதிர்பாராத அளவு விலை உயர்வைச் சந்தித்த தங்கம் விலை, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கணிசமாக குறைந்து வந்தது. ரூ.38 ஆயிரத்தில் இருந்து படிப்படியாக குறைந்து நேற்று ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. தங்கம் மீதான முதலீடுகள் குறைந்திருப்பதால், தங்கம் விலை மீண்டும் ரூ.30 ஆயிரத்தை அடையும் எனக் கூறப்பட்டது.

மீண்டும் ரூ.35 ஆயிரத்துக்கு மேல் உயர்ந்தது தங்கம் விலை!

இதற்கிடையில், மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கத்தின் இறக்குமதி வரியை 12.5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டதால் தங்கம் விலை அவ்வப்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.28 அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 அதிகரித்து ரூ.4,376க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.224 அதிகரித்து ரூ.35,008க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.80க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,800க்கும் விற்பனையாகிறது.