தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

 

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக கணிசமாக குறைந்து வருகிறது. தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்ததால் தங்கம் விலை பெருமளவு குறைந்து வரும் நிலையில், மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, தற்போது ரூ.35 ஆயிரத்தில் நீடித்து வரும் தங்கம் விலை ரூ.30 ஆயிரத்துக்கு கீழ் சரிய வாய்ப்பிருப்பதாக முதலீட்டாளர்கள் சிலர் கூறுகின்றனர். அதுவே ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இந்த நிலையில், நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4,380க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.35,040க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.74.30க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,300க்கும் விற்பனையாகிறது.