தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

 

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 அதிகரித்துள்ளது.

தொழில்துறையில் நிலவும் தேக்கத்தால் ஆபரணத்தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததால் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்த தங்கம் விலை, தற்போது முதலீடுகள் குறைந்திருப்பதால் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த 2ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது தங்கத்தின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் ஒரு சில நாட்கள் தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 அதிகரித்து ரூ.4,468-க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.88 அதிகரித்து ரூ.35,744-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.75.50க்கும் விற்பனையாகிறது.