தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

 

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை கடந்த மாதத்திலிருந்து ஏற்ற, இறக்கத்தை சந்தித்து ரூ.36 ஆயிரத்திலேயே நீட்டித்து வந்தது. இந்த மாதமும் அதே நிலையில் தான் உள்ளது. இம்மாதத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.36,384க்கு விற்பனையானது. நேற்று தங்கம் விலை ரூ.36,184 ஆக குறைந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இன்றைய நிலவரத்தின் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.4,533க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.36,264க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,700க்கும் விற்பனையாகிறது.