தங்கம் விலை திடீர் சரிவு… இன்றைய நிலவரம் என்ன?

 

தங்கம் விலை திடீர் சரிவு… இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு பொதுமுடக்க காலத்தின் போது தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு விலை உயர்வை சந்தித்தது. அச்சமயம், தொழில்துறையில் நிலவிய தேக்கம் முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திசை திருப்பியது. இதனால், தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து தங்கம் விலை எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தைக் கண்டது. பின்னர், தங்கம் விலை குறைந்து ரூ.33 ஆயிரத்தில் நீடித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருப்பதால் தொழில்துறையில் தேக்கம் குறித்த அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்திக்கிறது.

தங்கம் விலை திடீர் சரிவு… இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4,575க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.36,600க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.76.50க்கும் விற்பனையாகிறது.