‘தொடர் ஏற்றத்துக்கு பின் சரிந்தது தங்கம் விலை’: இன்றைய நிலவரம் என்ன?

 

‘தொடர் ஏற்றத்துக்கு பின் சரிந்தது தங்கம் விலை’: இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு மக்கள் எதிர்பாரத அளவுக்கு தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்தது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால், கிடுகிடுவென தங்கம் விலை உயர்ந்தது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் முதலீடு குறைந்ததால் தங்கம் விலை கணிசமாக குறைந்து ரூ.38 ஆயிரத்தில் நீடித்து வந்தது. அதன் பிறகு, தங்கம் விலையில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லாத நிலையில், புத்தாண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்றத்தைக் கண்டது.

‘தொடர் ஏற்றத்துக்கு பின் சரிந்தது தங்கம் விலை’: இன்றைய நிலவரம் என்ன?

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.4,805க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ. 640 குறைந்து ரூ.38,440க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 3 காசுகள் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.74.07க்கும் ஒரு கிலோ தங்கம் ரூ.74,070க்கும் விற்பனையாகிறது.