சரிந்தது தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?

 

சரிந்தது தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த இரண்டு வாரத்துக்கு மேலாக ஏற்ற, இறக்கத்தை சந்தித்து ரூ.36 ஆயிரத்திலேயே நீட்டித்து வருகிறது. அதாவது ஒரு நாள் தங்கம் விலை குறைந்தால் மறுநாள் உயரும் நிலையில் உள்ளது. நேற்று முன்தினம் ரூ.36,080க்கு விற்பனையான தங்கம் விலை நேற்று ரூ.36,200 ஆக உயர்ந்தது. இன்று மீண்டும் குறைந்துள்ளது.

சரிந்தது தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.4,504க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.36,032க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.90க்கும் ஒரு கிலோ ரூ.71,900க்கும் விற்பனையாகிறது.