‘ஏறுமுகத்தில் தங்க விலை’.. ஒரு கிராம் தங்கம் ரூ.4,925க்கு விற்பனை!

 

‘ஏறுமுகத்தில் தங்க விலை’.. ஒரு கிராம் தங்கம் ரூ.4,925க்கு விற்பனை!

தங்க விலை கிராமுக்கு ரூ.16 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,925க்கு விற்பனையாகிறது.

ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்க விலை, மார்ச் மாதத்துக்கு பிறகு அதிரடியா உயரத் தொடங்கியது. குறிப்பாக ஊரடங்கு அமலாகி இருந்த மாதங்களில், வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது. பொருளாதார வீழ்ச்சியாலும், வரத்து குறைந்ததாலும் எதிர்பாராத அளவுக்கு விலை உயர்ந்ததாக கூறப்பட்டது. சுமார் ரூ.43 ஆயிரத்தை எட்டி புதிய உச்சத்தை அடைந்த தங்க விலை உயர்வு, நடுத்தர மக்களை பெறும் அதிர்ச்சிகுள்ளாக்கியது. மேலும் தங்க விலை உயரும் என கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்ததால், ரூ.39 ஆயிரத்தில் நீடித்து வருகிறது.

‘ஏறுமுகத்தில் தங்க விலை’.. ஒரு கிராம் தங்கம் ரூ.4,925க்கு விற்பனை!

இன்றைய நிலவரத்தின் படி தங்க விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,925க்கு விற்பனையாகிறது. அதன் படி தங்க விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.39,400க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.70.90க்கு விற்பனையாகிறது.