Home Uncategorized குறைந்து வரும் தங்க விலை: ஒரு கிராம் தங்கம் ரூ.4,885க்கு விற்பனை!

குறைந்து வரும் தங்க விலை: ஒரு கிராம் தங்கம் ரூ.4,885க்கு விற்பனை!

தங்க விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,885க்கு விற்பனையாகிறது.

ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த தங்க விலை, மார்ச் மாதத்துக்கு பிறகு அதிரடியா உயரத் தொடங்கியது. குறிப்பாக ஊரடங்கு அமலாகி இருந்த மாதங்களில், வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது. பொருளாதார வீழ்ச்சியாலும், வரத்து குறைந்ததாலும் எதிர்பாராத அளவுக்கு விலை உயர்ந்ததாக கூறப்பட்டது. சுமார் ரூ.43 ஆயிரத்தை எட்டி புதிய உச்சத்தை அடைந்த தங்க விலை உயர்வு, நடுத்தர மக்களை பெறும் அதிர்ச்சிகுள்ளாக்கியது. மேலும் தங்க விலை உயரும் என கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்ததால், ரூ.39 ஆயிரத்தில் நீடித்து வருகிறது.

இன்றைய நிலவரத்தின் படி தங்க விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,885க்கு விற்பனையாகிறது. அதன் படி தங்க விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.39,080க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.69.80 விற்பனையாகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி: என்னென்ன தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 14ம் தேதி சென்னை வந்ததைத் தொடர்ந்து, இன்று மீண்டும் கோவை வந்திருக்கிறார். அன்று அரசு முறை பயணமாக சென்னை வந்த அவர் இன்று பாஜகவின்...

பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!

திருச்சி திருச்சி அருகே பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அடுத்த தாயனூர்...

நீர் மேலாண்மை திட்டத்தில் தமிழகம் முதலிடம் : முதல்வர் பழனிசாமி பெருமிதம்!

கோவையில் நடைபெறவிருக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கோவை வந்திருக்கிறார். வழி நெடுகிலும் தொண்டர்கள் அவருக்கு பலத்த வரவேற்பு அளித்தனர். கொடிசியா அரங்கிற்கு காரில் அவர் வரும்...

அனல் பறக்கும் அரசியல் களம்: கோவையில் பிரதமர் நரேந்திர மோடி!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரதமரும் பாஜக தலைவருமான நரேந்திர மோடி இம்மாதத்திலேயே இரண்டாம் முறையாக தமிழகத்திற்கு வந்திருக்கிறார். இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த...
TopTamilNews