மீண்டும் ஏற்றத்தில் தங்க விலை; கிராமுக்கு ரூ.41 அதிகரிப்பு!

 

மீண்டும் ஏற்றத்தில் தங்க விலை; கிராமுக்கு ரூ.41 அதிகரிப்பு!

தங்க விலை இன்று கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,805க்கு விற்பனையாகிறது.

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு போடப்பட்டதில் இருந்தே வரத்து குறைவு, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்க விலை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத ஏற்றதைக் கண்டது. ரூ.43 ஆயிரத்தை எட்டிய தங்க விலை, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உயரும் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த விலை உயர்வு ஏழை எளிய மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் கடந்த சில நாட்களாக கணிசமாக குறைந்து வந்த தங்க விலை இன்று மீண்டும் ஏற்றத்தை சந்தித்துள்ளது.

மீண்டும் ஏற்றத்தில் தங்க விலை; கிராமுக்கு ரூ.41 அதிகரிப்பு!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.41 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,805க்கு விற்பனையாகிறது. அதன் படி சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.38,440க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.70 உயர்ந்து ரூ.63.10க்கு விற்பனையாகிறது.