சரிந்தது தங்க விலை : ஒரு கிராம் தங்கம் ரூ.4,755க்கு விற்பனை!

 

சரிந்தது தங்க விலை : ஒரு கிராம் தங்கம் ரூ.4,755க்கு விற்பனை!

தங்க விலை இன்று அதிரடியாக குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4,755க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தங்க விலை எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. சுமார் ரூ.33 ஆயிரம் வரையில் விற்கப்பட்ட தங்க விலை வரலாறு காணாத விலை உயர்வாக பார்க்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்திலும் தங்க விலை உயர்ந்த நிலையில், மாறி மாறி ஏற்ற இறக்கத்தை சந்தித்தது. பின்னர், கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் போது ரூ.44 ஆயிரம் வரையில் தங்க விலை உயர்ந்து மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தங்க விலை கணிசமாக குறைந்து தற்போது ரூ.38 ஆயிரத்தில் நீடித்து வருகிறது.

சரிந்தது தங்க விலை : ஒரு கிராம் தங்கம் ரூ.4,755க்கு விற்பனை!

இந்த நிலையில், தங்க விலை இன்று கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,755க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.38,040க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.70 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.60.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.