• February
    18
    Tuesday

Main Area

Main



தாமரையை மலர வைக்க டெல்லிக்கு படையெடுக்கும் பாஜக நிர்வாகிகள்..!

மோடி
மோடி

பாஜக மாநில தலைமையை யாரும் மதிப்பதே இல்லை எனக் கூறப்படுகிறது. அவரவர்கள் இஷ்டத்துக்கு தங்களுக்கு வேண்டிய டெல்லி தலைவர்களை பிடித்து ஆதரவு திரட்ட முயற்சி செய்து வருகிறார்கள். சிலர் இன்னும் மாவட்டம்தோறும் பயணம் மேற்கொண்டு ஆட்களை திரட்டி வருகிறார்கள். கட்சி பணியை விட்டுவிட்டு தொண்டர்களை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இதனால் தமிழகத்தில் தாமரை அப்படியே செயலிழந்து கிடப்பதாக பேசிக்கொள்கிறார்கள். இதில் முன்னாள் அமைச்சர் சி.பி.ராதாகிருஷ்ணன் ரொம்பவே தீவிரமாக மாநில தலைவர் பதவியை பிடித்தே ஆக வேண்டும் என்கிற வேட்கையில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்தும் போனில் ஆதரவு கேட்டும் வருகிறாராம். எது எப்படி இருந்தாலும் டெல்லி தலைமை நினைப்பதுதான் தமிழகத்தில் நடக்கும் என்பதால் ஒரே நேரத்தில் டெல்லிக்கும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கட்சி தலைவர்கள் சென்று வருகிறார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.