காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா லாபம் ரூ.55 கோடி

 

காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா லாபம் ரூ.55 கோடி

சிகரெட் தயாரிப்பு நிறுவனமான காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.55.09 கோடி ஈட்டியிருந்தது. இது சென்ற ஆண்டின் இதே காலண்டைக் காட்டிலும் 53.56 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியாவின் நிகர லாபம் ரூ.118.63 கோடியாக இருந்தது.

காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா லாபம் ரூ.55 கோடி
காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா பிராண்டு சிகரெட்

2020 ஜூன் காலாண்டில் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான மொத்த வருவாய் ரூ.503.60 கோடியாக குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 41.33 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியாவின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.858.49 கோடியாக உயர்ந்து இருந்தது.

காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா லாபம் ரூ.55 கோடி
காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா

கடந்த காலாண்டில் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனத்தின் செலவினம் கணிசமான அளவு குறைந்துள்ளது. 2020 ஜூன் காலாண்டில் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.440.85 கோடி செலவு செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 35.55 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனம் ரூ.681.75 கோடிக்கு செலவினம் மேற்கொண்டு இருந்தது.