கடவுள் வலிமை தர வேண்டும்! – கேரள விபத்துக்கு இம்ரான்கான் இரங்கல்

 

கடவுள் வலிமை தர வேண்டும்! – கேரள விபத்துக்கு இம்ரான்கான் இரங்கல்

கேரள விமான விபத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமானம் விபத்துக்குள்ளானதில் 18 போ உயிரிழந்தனர். பலரும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விமானத்தின் கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டு ஆய்வுக்காக டெல்லி கொண்டு செல்லப்பட உள்ளது.

கடவுள் வலிமை தர வேண்டும்! – கேரள விபத்துக்கு இம்ரான்கான் இரங்கல்
இந்த நிலையில் விமான விபத்து பற்றிய தகவல் அறிந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன்னுடைய இரங்கலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “கேரள மாநிலத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி ஏராளமான அப்பாவிகள் உயிரிழந்தது கேள்வியுற்று வருத்தம் அடைந்தேன். அல்லா (இறைவன்) தைரியமான அந்த குடும்பங்களுக்கு இந்த கடுமையான சூழலை எதிர்கொள்ள வலிமையைக் கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

http://


துபாயில் இருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானம் நேற்று கோழிக்கோடு வந்தது. இந்த விமானத்தில் 191 பயணிகள் இருந்தனர்.

கடவுள் வலிமை தர வேண்டும்! – கேரள விபத்துக்கு இம்ரான்கான் இரங்கல்

இரவு 7.38 மணி அளவில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் மழைநீர் நிறைந்திருந்ததால் விபத்து நேரிட்டது என்று கூறப்படுகிறது. கருப்புப் பெட்டியில் கடைசி நிமிட உரையாடல் இடம் பெற்றிருக்கும். அதை ஆய்வு செய்த பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.