#GoBackStalin திமுகவை எதிர்க்கும் தேவர் சமுதாயம்-தேசிய அரசியலில் பரபரப்பு

 

#GoBackStalin திமுகவை எதிர்க்கும் தேவர் சமுதாயம்-தேசிய அரசியலில் பரபரப்பு

முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜைக்காக பசும்பொன் செல்லும் திமுக தலைவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, #GoBackStalin ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகிறது.

#GoBackStalin திமுகவை எதிர்க்கும் தேவர் சமுதாயம்-தேசிய அரசியலில் பரபரப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை இன்று 30.10.2020ல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு குருபூஜை நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

#GoBackStalin திமுகவை எதிர்க்கும் தேவர் சமுதாயம்-தேசிய அரசியலில் பரபரப்பு

அனைத்துக்கட்சியினரும் தேவர் குருபூஜைக்கு சென்று மரியாதை செலுத்தி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

ஆனால், மு.க.ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, #GoBackStalin என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். இது இந்த அளவில் டிரெண்டிங் ஆகிறது.

#GoBackStalin திமுகவை எதிர்க்கும் தேவர் சமுதாயம்-தேசிய அரசியலில் பரபரப்பு

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தேவர் சமுதாயம் திமுகவை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. #GoBackStalin ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆவதால் தமிழக அரசியலில் மட்டுமல்லாது தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தி இருக்கிறது.