#GoBackModi என்பது ஒட்டுமொத்த இந்தியாவின் குரல்: திருநாவுக்கரசர்

 

#GoBackModi என்பது ஒட்டுமொத்த இந்தியாவின் குரல்: திருநாவுக்கரசர்

#GoBackModi என்பது ஒட்டுமொத்த இந்தியாவின் குரல் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சென்னை: #GoBackModi என்பது ஒட்டுமொத்த இந்தியாவின் குரல் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்தார். ஆனால் அவரது வருகைக்கு எதிராக நெட்டிசன்கள் #GoBackModi என்ற ஹேஷ்டாக்கையும், #GoBackSadistModi என்ற ஹேஷ்டாக்கையும் உலகளவில் ட்ரெண்டாக்கினர்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், #GoBackModi என்பது தமிழகத்தின் குரல் மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் குரல். எதுவுமே செய்யாத மோடி பதவியை விட்டு போகவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதன் வெளிபாடுதான் இந்த பதிவுகள்.

தமிழகத்தில் புயல் பாதித்த நேரத்திலும் சரி, தூத்துக்குடிச் சம்பவத்திலும் சரி ஒரு ஆறுதல் வார்த்தை கூட சொல்லாதவர், தமிழகத்தை திரும்பி பார்க்காதவர். எனவே திரும்பிப்போ என்று சொல்லாமல் என்ன செய்வார்கள்.வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் அவருக்கு இதே நிலைதான் ஏற்படும். வாக்கு கேட்டு வராதீர்கள். நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்றுதான் கூறுவார்கள் என்றார்.