#GoBackModi அதகளப்படுத்தும் வலைதளவாசிகள்… வைரல் கார்ட்டூன்ஸ்

 

#GoBackModi அதகளப்படுத்தும் வலைதளவாசிகள்… வைரல் கார்ட்டூன்ஸ்

#GoBackModi என்ற ஹேஷ்டாக்கில் மோடி திரும்பி செல்ல வேண்டும் என்று ஏராளமான கார்ட்டூன்கள் வைரலாகி வருகின்றன.

சென்னை: #GoBackModi என்ற ஹேஷ்டாக்கில் மோடி திரும்பி செல்ல வேண்டும் என்று ஏராளமான கார்ட்டூன்கள் வைரலாகி வருகின்றன.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தனது அசுர கரங்களால் அடையாளம் தெரியாமல் புரட்டி போட்டு சென்றது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பாமல் இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இன்று வரை ஆறுதல் கூறாமல் மவுனமாக இருக்கிறார். அதுமட்டுமின்றி தமிழக அரசு கேட்ட நிவாரண தொகையையும் மத்திய அரசு முழுமையாக வழங்கவில்லை. 

amodi

மோடியின் மவுனமும், மத்திய அரசின் செயலும் தமிழகத்தை டெல்லி முழுமையாக ஒதுக்குகிறது என அப்பட்டமாகியுள்ளது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். 

bmodi

மேலும், கஜா புயலுக்கு மோடியின் மவுனம், நீட் தேர்வால் அனிதா உயிரிழந்த போது மோடியின் மவுனம், மீத்தேன் விவகாரத்தில் மோடியின் மவுனம், பாஜகவுக்கு எதிராக பேசினால் சுமத்தப்படும் ஆண்ட்டி இந்தியன் பட்டத்தின் போது இருந்த மோடியின் மவுனம், பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என ஹெச்.ராஜா பேசிய போது இருந்த மோடியின் மவுனம், தமிழக காவல்துறையை மிகவும் கீழ்த்தரமாக ராஜா பேசிய போது இருந்த மோடியின் மவுனம் என மோடியின் பல மவுனங்களால் தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கும், மோடியின் செல்வாக்கும் மவுனித்து பல நாட்களாகிவிட்டன என பலர் கூறுகின்றனர். 

cmodi

அதுமட்டுமின்றி, கஜாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற வராத பிரதமர், அவர்களுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தைக்கூட பேசாத பிரதமர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு அடிக்கல் நாட்ட இன்று மதுரை வருகிறார். பாஜக மாநாட்டிலும் அவர் பங்கேற்க இருக்கிறார். இவ்வளவு நாள் பிரதமரின் பார்வையில் படாமல் இருந்து வந்த தமிழகம் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அவரது கண்ணுக்கு புலப்பட்டிருக்கிறது எனவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

dmodi

இந்நிலையில், இன்று மதுரைக்கு வர இருக்கும் பிரதமர் மோடிக்கு எதிராக  #GoBackModi,#GoBackSadistModi, #Gobackmodi_2Point0 என்ற பல ஹேஷ்டாக்குகள் ட்விட்டரில் உலகளவில் ட்ரெண்டாகி வருகின்றன. இது இப்படி இருக்க மோடி தமிழகம் வரக்கூடாது எனவும், அவர் திரும்பி செல்ல வேண்டும் எனவும் ஏராளமான கார்ட்டூன்கள் வைரலாகி வருகின்றன. 

emodi

ஒரு நாட்டின் பிரதமருக்கு வேறு எந்த மாநிலத்திலும் எழாத எதிர்ப்பு தமிழகத்தில் மட்டும் இவ்வளவு எழுகிறது என்றால் அது அந்த மாநில மக்களின் தவறில்லை பிரதமரின் தவறுதான் என அரசியல் நோக்கர்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.