`கடந்தாண்டு பக்ரீத்தில் 200 ஆடுகள் விற்றோம்; இந்தாண்டு 50 ஆடுகள் கூட விற்க முடியவில்லை!’- வியாபாரிகள் வேதனை

 

`கடந்தாண்டு பக்ரீத்தில் 200 ஆடுகள் விற்றோம்; இந்தாண்டு 50 ஆடுகள் கூட விற்க முடியவில்லை!’- வியாபாரிகள் வேதனை

“கடந்த பக்ரீத் பண்டிகை சமயங்களில் 200 ஆடு விற்பனையான நிலையில் தற்போது 50 ஆடு விற்பனையாவதே பெரிதாக இருக்கிறது” என்று ஆடு வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வரும் 1ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஆடு விற்பனை களைகட்டி விடும். தற்போது, கொரொனா தொற்றால் ஆடு விற்பனை மிக குறைந்த அளவே விற்பனையாகி வருகிறது. அதிகமாக மக்கள் கூட்டம் கூடக் கூடாது என்பதால் பிரியாணிக்காக ஆடு வாங்குவதும் குறைந்திருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், உடன்குடி, நெல்லை மாவட்டம், மேலபாளையம், கோவையில் இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் போத்தனூர், குனியமுத்தூர், உக்கடம் , கரும்புகடை ஆகிய பகுதிகளில் ஆடுவிற்பனை களை இழந்து காணப்படுகிறது.

`கடந்தாண்டு பக்ரீத்தில் 200 ஆடுகள் விற்றோம்; இந்தாண்டு 50 ஆடுகள் கூட விற்க முடியவில்லை!’- வியாபாரிகள் வேதனை

இது குறித்து ஆடு வியாபாரிகள் கூறுகையில், “கடந்த பக்ரீத் பண்டிகை சமயங்களில் 200 ஆடு விற்பனையான நிலையில் தற்போது 50 ஆடு விற்பனையாவதே பெரிதாக இருக்கிறது. வழக்கமாக பண்டிகை காலத்தில் 5 ஆடுகளுக்கு மேல் வாங்குபவர்கள் இப்போது ஒரு ஆடு அல்லது இரண்டு ஆடுகள் மட்டுமே வாங்கி செல்கின்றனர்” என்று கூறினர்.

ஆடு வாங்க வந்த இஸ்லாமியர்கள் கூறுகையில், “பிரியாணிக்காக வாங்கப்படும் ஆடுகளின் விலையும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மிக அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஆட்டின் விலை அதன் எடைக்கு ஏற்றபடி 4,000 முதல் 6,000 வரை அதிகமாக இருக்கிறது. குட்டி ஆடு 12,000 முதல் பெரிய ஆடு 25,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது” என்ற தெரிவித்தனர்.

கொரோனாவால் வழிபாட்டு தலங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. 75 நாட்களுக்கு மேல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படாததால் ஆன்லைனில் பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. இந்த கொரோனாவால் மக்கள் தங்கள் முக்கிய பண்டிகைகளை கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.