காரில் டிப் டாப்பாக வந்து ஆடு, கோழி திருடிய இளைஞர்கள்: கையும் களவுமாக பிடித்த போலீசார்!

காரில் டிப் டாப்பாக வந்து ஆடு, கோழி திருடிய இளைஞர்கள்: கையும் களவுமாக பிடித்த போலீசார்!

திருவேற்காடு அருகே காரில் வந்து ஆடு, கோழிகளை திருடிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவேற்காடு, அடுத்த மேல் அயனம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் ஜலாத் என்பவர், இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். இறைச்சிக்காக இவரது கடையில் ஆடுகள் மற்றும் கோழிகளை வைத்திருந்துள்ளார். இந்த நிலையில், அந்த கடையில் ஜலாத் இல்லாத சமயம் பார்த்து புகுந்த திருடர்கள் 4 ஆடுகள் மற்றும் 15 கோழிகளை திருடிச் சென்றுள்ளனர். அதனைக் கண்ட ஜலாத், அவர்களை பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் அவர்கள் காரில் சென்று விட்டதால், இது குறித்து அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காரில் டிப் டாப்பாக வந்து ஆடு, கோழி திருடிய இளைஞர்கள்: கையும் களவுமாக பிடித்த போலீசார்!

அந்த புகாரின் பேரில் திருடர்களை பிடிக்க ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், திருநின்றவூரில் கோழி ஆடுகளை திருடிக் கொண்டிருந்த போது மடக்கி பிடித்துள்ளனர். பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் 2 பேரும் பொன்னேரி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் காரில் டிப்டாப்பாக வந்து ஆடு, கோழிகளை திருடிச் செல்வதை வாடிக்கையாக செய்து வருவதும் தெரிய வந்துள்ளது.

காரில் டிப் டாப்பாக வந்து ஆடு, கோழி திருடிய இளைஞர்கள்: கையும் களவுமாக பிடித்த போலீசார்!

இதனையடுத்து அவர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்ற நிலையில், அப்பகுதியில் இருந்த மாடுகள் காணமல் போனதாகவும் அவர்களிடம் அதனை பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.